search icon
என் மலர்tooltip icon
    • திருமண மண்டபத்தின் வாசலில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மணமகளின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஆடம்பர திருமணங்கள் நடைபெறும் போது மணமக்களை விலை உயர்ந்த வாகனங்கள் அல்லது பாரம்பரிய முறைப்படி அழைத்து வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக மணமக்கள் வித்தியாசமான முறையில் ஊர்வலமாக அழைத்து வரப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மணப்பெண் ஒருவர் திருமண மண்டபத்துக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திருமண மண்டபத்தின் வாசலில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மணமகளின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர். அப்போது மணமகள் தன்னந்தனியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறார். அவரை ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • நோர்ஜஸ் வங்கி தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி நிறுவனத்தை நீக்கியது.
    • நார்வே வங்கி எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    ஓஸ்லோ:

    நார்வேயின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இந்நிலையில், நார்வேயின் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதிக்கு தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் சீனாவின் வெய்ச்சாய் பவர் நிறுவனங்களும் கைவிடப்பட்டன.

    நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, இதை ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம் எனக்கூறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    நார்வே நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
    • சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.

    பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.

    எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.

    • கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது.
    • தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவித்த நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, நீலகிரி, கொடைக்கானலுக்கும் பயணம் மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர்.
    • சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள்.

    மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 8 ஜோடி இரட்டை குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அங்குள்ள ஐஸ் வால் பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுகளிலும் பல இரட்டை குழந்தைகள் சேர்ந்து பயின்றுள்ளனர்.

    கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவாக 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதில் 4 ஜோடி பெண் குழந்தைகளும், 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர் என்றார்.

    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள். அவரது மகன் ரெம்ருதிகா, மகள் லால்சார்ஜோவி ஆகியோர் எல்.கே.ஜி.யில் சேர்ந்துள்ளனர். அவர்கள் ஜூலை 21-ந் தேதி 5 வயதை எட்டுகிறார்கள்.

    • இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
    • ம் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலைய ஊழயர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நூசா நிறுவனத்தின் ஏர்பஸ் A320 என்ற விமானத்தின் உள்ளே ஆய்வு செய்துவிட்டு இருந்து இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள் இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ஏணியை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

    இதனால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி அந்த ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் விமான நிலையங்களில் நடப்பது தொடர்த்தியாயாகி வருவதாகவும் நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர். இந்த சம்பவத்துக்கு நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. 

    • ஆவி வடேகர் என்ற அந்த பயனர் வெளியிட்ட வீடியோ மணாலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
    • வைரலான வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பல பெண்களின் கனவாகவே இருக்கிறது. வயது கடந்தாலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறுவதற்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் தவம் கிடக்கின்றனர்.

    அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த பெண் ஒருவர் சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தின் அழகிய மலை பகுதிக்கு தனது மகனுடன் சுற்றுலா சென்ற போது ஸ்ரீதேவியின் பாடலுக்கு அவரை போன்றே நடனம் ஆடி தனது தீராத பாலிவுட் கனவை தீர்த்து கொண்டதாக அவரது மகன் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    ஆவி வடேகர் என்ற அந்த பயனர் வெளியிட்ட வீடியோ மணாலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆவி வடேகரின் தாயார் 1989-ம் ஆண்டு யாஷ்சோப்ராவின் 'சாந்தினி' திரைப்படத்தில் ஸ்ரீதேவி மற்றும் ரிஷிகபூர் ஆகியோர் நடனம் ஆடிய 'தேரே மேரே...' பாடலுக்கு ஸ்ரீதேவி போலவே நடனம் ஆடும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ தனது தாய்க்கு மறக்க முடியாத தருணம் ஆக இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஆவி வடேகர் தனது பதிவில், வயது என்பது உங்கள் கனவை நிறைவு செய்வதற்கான ஒரு எண் என்று அதற்கு சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளார். வைரலான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.


    • தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
    • கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசு மீண்டும் திறக்க தீர்மானித்துள்ள 26 மணல் குவாரிகளும் காவிரி பாசன மாவட்டங்களில் தான் அமையவுள்ளது. அவற்றில் 20 மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டவை ஆகும்.

    மீண்டும், மீண்டும் மணல் குவாரிகளைத் திறப்பது தமிழ்நாட்டை, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தர பாலைவனமாக மாற்றிவிடும்.

    தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று கூறி மதுவின் விற்பனையை அதிகரிப்பதும், கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல. தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினர்.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறியதாவது:

    முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் ஸ்வாதி மாலிவால் நேற்று இரவு வீடு திரும்பினார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்திய சினிமாவில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் 12 மகள் உள்ளார்.

    இந்நிலையில் பிரான்சில் கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்துவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, சிவப்பு கமபலத்தில் நடந்து வந்து தங்களை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் மகள் ஆராத்யாவுடன் தோன்றிய புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.

    அதற்கு முக்கிய காரணம் தனது வலது கையில் காயத்துக்காக மாவுக் கட்டு போட்டுகொண்டு அதோடு அவர் அங்கு தோன்றியதே ஆகும். காயத்தையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்காக ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பது நாம் உருவாக்குவதே ஆகும்.

     

    அதன்படி, கையில் கட்டுடன் தோன்றி அதையும் ஒரு ஸ்டைலாக ஐஸ்வர்யா ராய் மாற்றியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பூரிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசியாக ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 மாற்றும் 2 ஆம் பாகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×